ADDED : டிச 15, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் சமுதாய அறிவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பெண் விவசாயிகளுக்கு பேக்கரி பொருட்கள் தயாரிப்பு குறித்த 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
துவக்கவிழாவில் இணைப் பேராசிரியர் ஆரோக்கிய மேரி வரவேற்றார். முதல்வர் காஞ்சனா சிறுதானிய மதிப்பு கூட்டுதலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, பேராசிரியர்கள் புஷ்பா, சசிதேவி, ரம்யா சிவசெல்வி தொழில் முனைவோர் மேம்பாட்டில் தொழில்நுட்பம் குறித்து விளக்கினர். பேராசிரியர் சரவணகுமார் நன்றி கூறினார். ஆராய்ச்சியாளர்கள் செந்தாமரை செல்வி, மோனிஷா, சங்கீதா, ஆனந்த் பங்கேற்றனர். புட்டிங் கேக், சிறுதானிய குக்கீஸ், கேக், ரொட்டி தேங்காய் பன், ஜாம் செயல்விளக்க முறை கற்றுத்தரப்பட்டது.