/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேரையூரில் பனங்கிழங்கு விற்பனை ஜோர்
/
பேரையூரில் பனங்கிழங்கு விற்பனை ஜோர்
ADDED : நவ 29, 2024 05:55 AM
பேரையூர்: பேரையூர் பகுதியில் பனங்கிழங்கு விற்பனை மும்முரமாக நடக்கிறது.
பேரையூர், மேலப்பட்டி, சந்தையூர், கீழப்பட்டி, லட்சுமிபுரத்தை சேர்ந்த விவசாயிகள் பனம் பழங்களை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சேகரித்தனர்.
இந்தப் பழத்திலிருந்து கொட்டைகளை பிரித்து எடுத்து, மண்ணில் கொட்டி மூடி வைக்கின்றனர். இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பனங் குருத்து வெளியே தெரியும் நேரத்தில், மண்மேட்டை தோண்டுகின்றனர். அப்போது முளைவிட்ட பனங்கிழங்குகள் கிடைக்கிறது. அவற்றை துாய்மைப்படுத்தி தரம்பிரிக்கின்றனர்.
அவ்வாறு பெற்ற பனங்கிழங்குகளை நகர்பகுதியில் கொண்டு சென்று விற்கின்றனர். இந்த சீசன் தற்போது பேரையூரில் துவங்கியுள்ளது. பத்து எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக வீதிகளிலும் விற்பனை செய்கின்றனர்.
ஒரு கட்டு ரூ.70 வரை விலை போகிறது. சுவையான இக்கிழங்கு விற்பனை ஜோராக நடக்கிறது.