/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வங்கியில் மோசடி : 3 பேருக்கு தண்டனை
/
வங்கியில் மோசடி : 3 பேருக்கு தண்டனை
ADDED : பிப் 28, 2024 05:10 AM
மதுரை : மதுரை ஆசாரி தோப்பு செல்வம். சுய உதவிக் குழுவின் மூலம் வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி செல்லுார், மீனாம்பாள்புரம் உள்ளிட்ட நகரின் பல பகுதி பெண்களிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து பெற்றார். போலி ஆவணங்களை உருவாக்கி, பல பெண்கள் பெயரில் மதுரை மீனாட்சி கல்லுாரி வளாக ஐ.ஓ.பி., வங்கி கிளையில் கடன் பெற்று ரூ.29.98 லட்சம் இழப்பு ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக செல்வம், ஜெகதீஸ்வரன், சின்னசாமி, சத்யா மீது சி.பி.ஐ.,போலீசார் 2014 ல் வழக்கு பதிந்தனர். சின்னசாமி இறந்தார்.
செல்வம், ஜெகதீஸ்வரன், சத்யாவிற்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பசும்பொன் சண்முகையா உத்தரவிட்டார்.

