/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்
/
ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்
ADDED : டிச 01, 2025 05:48 AM
மதுரை: 'மதுரை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்' என, தேசிய மனித உரிமை கவுன்சில் ஆப் இந்தியா, குளோபல் அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
மதுரையில் இவ்வமைப்பின் நிர்வாகிகள் கூட்டம், மாநில தலைவர் பிச்சைவேல் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேச பாண்டியன் வரவேற்றார். மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து நடந்த வீரவசந்தராயர் மண்டபப் பணிகளை முடித்தபின் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட தென்மாவட்ட கோயில்களுக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகங்கள் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

