ADDED : டிச 01, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: காந்தி மியூசியத்தில் இயற்கை வாழ்வியல் முகாம் ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் தலைமையில் நடந்தது.
உதவிப் பேராசிரியர் சுரேஷ் பாபு 'இயற்கை மருத்துவமும் முழுமை ஆரோக்கியமும்' தலைப்பில் பேசினார். இவர் பேசுகையில், 'ஒவ்வொருவரும் இயற்கை சார்ந்த வாழ்வியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
முறையான துாக்கம், உடம்பில் கழிவு நீக்கம் சரியாக இருந்தால் மட்டுமே முழுமை ஆரோக்கியம் சாத்தியம்' என்றார். உளவியல் நிபுணர் சவுந்தர்யா, கலெக்டர்நேர்முக உதவியாளர்சந்திரசேகரன்,இயற்கை மருத்துவர்கள் ஸ்வேதா, ஹரிபிரசாந்த் பங்கேற்றனர்.

