ADDED : ஆக 19, 2026 04:43 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் தாலுகா சேடபட்டி ஒன்றியம் டி. கிருஷ்ணாபுரத்தில் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம் தொடர்கிறது. கால்வாய்களை துார் வாராமல் இருப்பதால் கழிவு நீர் செல்ல வழி இன்றி தேங்கி நின்று, துர்நாற்றம் வீசுகிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்களால் துாங்க முடியவில்லை. இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
சிறு குழந்தைகள் முதல் பெரியோர் வரை அவ்வப்போது காய்ச்சல் வருவதும் மருத்துவமனைக்கும் செல்வது தொடர்கதையாகி வருகிறது. சேடபட்டி ஒன்றிய அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையாக கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து சுகாதாரம் காக்க வேண்டும். சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
