ADDED : செப் 11, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கும் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியை அமைச்சர் நிர்மல் குமார் துவக்கி வைத்தார்.
கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், கோபிசன் கலந்து கொண்டனர். மகளிர் பிரிவு போட்டியை துவக்கி வைத்த அமைச்சர் நிர்மல்குமார், தொடர்ந்து பந்தை அடித்து ஒரே முறையில் கோல் போட்டதால் அனைவரும் பாராட்டினர்.
