/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குளிக்கிற தண்ணீரே குடிநீரா... கொந்தளிக்கும் மக்கள்
/
குளிக்கிற தண்ணீரே குடிநீரா... கொந்தளிக்கும் மக்கள்
குளிக்கிற தண்ணீரே குடிநீரா... கொந்தளிக்கும் மக்கள்
குளிக்கிற தண்ணீரே குடிநீரா... கொந்தளிக்கும் மக்கள்
ADDED : மார் 01, 2024 06:40 AM
மேலுார் : கச்சிராயன்பட்டியில் மோட்டார் பழுதால் குடிநீராக பயன்படுத்த முடியாத அளவுக்கு உப்புத் தண்ணீரை பயன்படுத்துவதால் பொதுமக்கள் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் இக் கிராமத்தில், ஊராட்சி சார்பில் பால்குடியில் போர்வெல் மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. பத்து நாட்களுக்கு முன் மோட்டார் பழுதானதாகக் கூறி, பழுது நீக்குவதற்காக அதனைக் கழற்றி சென்றனர். இதுவரை சரி செய்து மீண்டும் பொருத்தவில்லை. பொதுமக்கள் குடிநீருக்காக அலைந்து திரிகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், ''சில நாட்களாக குடிநீர் சப்ளை இல்லாததால் பல கி.மீ., தொலைவில் உள்ள கணேசபுரத்தில் குளிப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். குடிப்பதற்கு உகந்த நீராக இல்லாததால் தொற்று நோய்க்கு ஆளாகிறோம். ஒரு குடம் தண்ணீர் ரூ. 30 க்கு விலைக்கு வாங்கும் அவலம் உள்ளது. ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
ஊராட்சி தலைவி அமிர்தம் கூறுகையில், உடனே மின் மோட்டாரை சரி செய்து பொருத்தி, குடிநீர் வினியோகம் சரிசெய்யப்படும் என்றார்.

