ADDED : பிப் 14, 2024 05:53 AM

'உண்மை அன்பு இருந்தால் காதலில் வெற்றி பெறலாம்' என்கின்றனர் ராமநாதபுரத்தை சேர்ந்த சரவணன், சினேகா தம்பதியினர்.
சரவணன் கூறியதாவது: முதன் முதலில் எனது காதலியை ஒரு கடையில் பார்த்தேன். பிளஸ் 2 வரை படித்துள்ளார். நான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். மூன்றாண்டுகள் காதலித்த பின்பு எங்களது திருமணம் 2023 ல் நடந்தது. காதலி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். எனது வீட்டில் பெற்றோர் ஆதரவு தெரிவித்தனர். எனது பெற்றோர், நண்பர்கள் சூழ கோயிலில் திருமணம் நடந்தது.
மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறோம். காதலித்த போது இருந்த மகிழ்ச்சியை விட திருமணம் முடிந்த பிறகும் அதிக மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறேன். அதற்கான காரணம்ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துள்ளோம்.
காதலித்தால் மட்டும் போதாது. அதில் உறுதியாக இருவரும் இருக்க வேண்டும். உண்மையான அன்பு இருந்தால் காதலில் வெற்றி பெறலாம்.

