ADDED : மார் 20, 2025 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: உறங்கான்பட்டி மந்தை கருப்பணசாமி பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு ஐந்து கிராம மக்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடந்தது.
தாசில்தார் செந்தாமரை தலைமையில் நடந்த விழாவில் வெள்ளலுார் நாடு உட்பட பலபகுதிகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
இக்காளைகளுக்கு கிராமத்தார் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து மஞ்சுவிரட்டு துவங்கியது. காளைகளைஅடக்கியதில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்படவே வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பார்வையாளர்களாக 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.