ADDED : ஜூலை 22, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தேசிய தேன் வாரியம் நிதியுதவியின் கீழ் மதுரை சொக்கிகுளம் வாப்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு பயிற்சி அமெரிக்கன் கல்லுாரியில் ஜூலை 24, 25 காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
எண்ணெய் விதை பயிர்களுடன் ஒருங்கிணைத்து அறிவியல்பூர்வ தேனீ வளர்ப்பு முறைகளை ஊக்குவிப்பதற்கான கருத்தரங்கு, பயிற்சி நடத்தப்படுகிறது. முன்பதிவு: 63749 85138.