/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தில் முறையான நிதிவிடுவிப்பின்றி அவதி! 10 நிமிடங்களே ஒதுக்குவதால் பயனாளிகள் பாதிப்பு
/
'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தில் முறையான நிதிவிடுவிப்பின்றி அவதி! 10 நிமிடங்களே ஒதுக்குவதால் பயனாளிகள் பாதிப்பு
'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தில் முறையான நிதிவிடுவிப்பின்றி அவதி! 10 நிமிடங்களே ஒதுக்குவதால் பயனாளிகள் பாதிப்பு
'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தில் முறையான நிதிவிடுவிப்பின்றி அவதி! 10 நிமிடங்களே ஒதுக்குவதால் பயனாளிகள் பாதிப்பு
UPDATED : டிச 21, 2024 08:03 AM
ADDED : டிச 21, 2024 05:52 AM

மதுரை: தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு முறையாக நிதியை விடுவிக்காததால் வீடு கட்டுவதில் தாமதம் ஏற்படுகிறது என பயனாளிகள் குமுறுகின்றனர்.
இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.3.5 லட்சம் உதவித்தொகை நான்கு கட்டங்களாக பிரித்து வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஒன்றிய அதிகாரிகள் ஆன்லைன் மூலம் அரசிடம் நிதியைப் பெற்று பயனாளிகளுக்கு வழங்குகின்றனர்.
இந்தாண்டு மதுரை 3468, திண்டுக்கல் 6125, தேனி 961, ராமநாதபுரம் 2400, சிவகங்கை 741, விருதுநகர் 1011 என மாநில அளவில் மொத்தம் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான நிதியை 'சிங்கிள் நோடல் அக்கவுன்ட்' (ஒற்றைச்சாளர கணக்கு) முறையில் மாநில அதிகாரிகள் நிதியை விடுவிக்கின்றனர். இதற்கு வாரம்தோறும் பணிமுடிந்த வீடுகள் குறித்த விவரங்களைப் பெற்று அதற்கேற்ப, அந்த நேரத்திற்கு பணத்தை ஒதுக்குகின்றனர்.
இதனை வாரம் ஒருமுறை விடுவிக்கின்றனர். பெரும்பாலும் இரவு நேரத்தில் விடுவிக்கின்றனர். அதனை இணையதளத்தில் பத்து நிமிடங்களில் பெற வேண்டும். முடியவில்லையெனில் அடுத்தவாரம் வரை காத்திருக்க வேண்டும்.
இதனால் அந்த நேரத்திற்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கம்ப்யூட்டரில் யூஸர் ஐ.டி., பாஸ்வேர்ட் எல்லாம் கொடுத்து காத்திருப்பர். விடுவிக்கும் நேரத்தில் ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் முனைப்பு காட்டும்போது இணையதளம் முடங்கும் நிலையும் ஏற்படுகிறது. சில மாவட்டங்களில் முழுமையாக நிதியை விடுவிக்கும் முன் நேரம் கடந்துவிடுகிறது. இதனால் நிதியை பெற இயலாமல் தவிக்கின்றனர்.
அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ''குறிப்பிட்ட நாளில் நிதிஒதுக்கி, குறிப்பிட்ட நேரத்தில் விடுவிப்பதால் ஏ.டி.எம்.மில் பணம் பெற காத்திருப்பது போல இருக்க வேண்டியுள்ளது. இத்துறையில் நுாறுநாள் வேலை போன்ற திட்டங்களுக்கு 2 மணி நேரம் அவகாசம் கொடுக்கின்றனர். அதைப் போல இத்திட்டத்திற்கும் ஒதுக்கி நிதியை விடுவிக்க வேண்டும். இத்திட்டத்திற்கு எந்நேரமும் நிதி இருக்கும் வகையிலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சென்னை இயக்குனரகத்தில் மனு வழங்கியும் தீர்வு கிடைக்கவில்லை'' என்றனர்.
பயனாளிகள் தரப்பில் கூறுகையில், ''அரசு விடுவிக்கும் நிதியை உரிய நேரத்தில் பெற்று தராத நிலையில் கட்டுமான பணியும் தாமதமாகிறது. இதனால் வீடுகட்டி முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிறது. இந்நிலை மாறவேண்டும்'' என்றனர்.