ADDED : அக் 16, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் மங்கல்ரேவு தெற்கு தெரு தங்கப்பாண்டி மகன் முனீஸ்வரன் 23, ராணுவத்தில் பணியாற்றினார். மூன்று மாதங்களுக்கு முன்பு இவருக்கும் அணைக்கரைப்பட்டி வெங்கடேஸ்வரிக்கும் திருமணம் நடந்தது.
முனீஸ்வரன் சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். நேற்று மதியம் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சிலைமலை பட்டிக்கு சென்று வீடு திரும்பினார். பின்னால் வந்த டிப்பர் லாரி முனீஸ்வரன் பைக்கில் மோதியதில் முனீஸ்வரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். டூவீலரில் மோதிய லாரி நிற்காமல் சென்று, சிறிது தூரத்தில் சென்று கொண்டிருந்த கொல்லவீரன் பட்டி சரவணகுமார் அவரது மனைவி பகவதி (இருவரும் ஹெல்மெட் அணியவில்லை) ஆகியோர் சென்ற டூவீலர் மீதும் மோதியது. இதில் இருவரும் காயமடைந்தனர். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.