ADDED : ஜன 31, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; குடியரசு தினத்தையொட்டி கவர்னர் மாளிகையில் சிறந்த சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த சேவை செய்தவர்களுக்கு கவர்னர் விருது வழங்கப்பட்டது.
இந்தாண்டு மதுரை மாவட்டத்தில் சிறந்த சேவை செய்ததற்கான விருது, இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது. ரத்ததான முகாம்கள், பள்ளி, கல்லுாரிகளில் விபத்து, மீட்பு உள்ளிட்ட விழிப்புணர்வு முகாம்களை நடத்தியது, ஆதரவற்றோரை மீட்டது உள்ளிட்ட சேவைகளுக்காக அவருக்கு கவர்னர் ரவி விருது மற்றும் ரூ.2 லட்சம் காசோலை வழங்கினார்.

