ADDED : டிச 16, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா முதல்வர் தேவதாஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக மதுரை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் டேவிட் பங்கேற்றார். அவர் பேசியதாவது, மகாகவி பாரதியார் ஒரு பல்கலைக் கழகம் தலைப்பில் இலக்கியம், அரசியல், ஆன்மீக துறைகளில் புதிய சிந்தனைகளை தனது கவிதை மூலம் மக்களுக்கு வழங்கியவர். மிகச்சிறந்த தீர்க்கதரிசி என்று பேசினார். விழாவில் யோகா மாணவர்கள் நாகராஜன், பானுமதி, பிரபு, தேவசேனா, காந்தி சிந்தனை மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். செயலாளர் நந்தராவ் ஒருங்கிணைத்தார்.

