/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அறிக்கையை திரும்பப் பெறும் 'நிதி ஆயோக்' பாரதிய கிசான் சங்கம் வரவேற்பு
/
அறிக்கையை திரும்பப் பெறும் 'நிதி ஆயோக்' பாரதிய கிசான் சங்கம் வரவேற்பு
அறிக்கையை திரும்பப் பெறும் 'நிதி ஆயோக்' பாரதிய கிசான் சங்கம் வரவேற்பு
அறிக்கையை திரும்பப் பெறும் 'நிதி ஆயோக்' பாரதிய கிசான் சங்கம் வரவேற்பு
ADDED : ஜூலை 04, 2025 03:18 AM
மதுரை: அமெரிக்காவுடனான விவசாய வர்த்தக பணி அறிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வாபஸ் பெறும் 'நிதி ஆயோக்' முடிவுக்கு பாரதிய கிசான் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
சங்க தேசிய பொதுச் செயலாளர் மோகினி மோகன் மிஸ்ரா, தேசிய துணைத்தலைவர் பெருமாள், மாநில செயலாளர் வீரசேகரன் கூறியதாவது: மத்திய அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும் 'நிதிஆயோக்' அமைப்பு, இந்தியா - அமெரிக்க விவசாய வர்த்தகத்தை ஊக்குவித்தல் என்ற பெயரில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகம் குறித்த பணி அறிக்கையை வெளியிட்டது.
அமெரிக்காவில் இருந்து பிற பால் பொருட்களுடன் மரபணு மாற்றப்பட்ட சோயாபீன் எண்ணெய், சோயாபீன் விதைகள், சோளத்தை இறக்குமதி செய்யும் பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தது. சோயாபீன் எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்காவுக்கு வரிச் சலுகைகளை வழங்கவும் பரிந்துரைத்தது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பக்க விளைவுகள், நன்மைகள் குறித்த ஆராய்ச்சி அறிக்கை இன்னும் வரவில்லை.
எனவே பாரதிய கிசான் சங்கம், அனைத்து விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் அந்த அறிக்கை 'நிதி ஆயோக்' வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. 'நிதி ஆயோக்'கின் செயல் அறிக்கை திரும்பப் பெறப்பட்டதன் மூலம் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதால் இந்த முடிவை வரவேற்கிறோம் என்றனர்.