நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் தெற்கு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.17 லட்சத்தில் கட்டப்பட உள்ள இரண்டு ரேஷன் கடைகளுக்கான பூமி பூஜையை பூமிநாதன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாண்டியன் கூட்டுறவு சங்கங்கள் மேலாண்மை இயக்குநர் பிரியதர்ஷினி, பொது மேலாளர் காமேஷ் கண்ணன், சார் பதிவாளர் செந்தில்பாண்டி, கவுன்சிலர் பூமா, ம.தி.மு.க., நகர் செயலாளர் முனியசாமி, அவைத் தலைவர் சுப்பையா, உதவி செயற்பொறியாளர் மயிலேரிநாதன், உதவி பொறியாளர் ஜாஹிர்உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.