ADDED : அக் 01, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் 11 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள், 5 கோயில்களின் அன்னதான உண்டியல்கள் திறப்பு இணை கமிஷனர் கிருஷ்ணன் முன்னிலையில் நேற்று நடந்தது.
உண்டியல் காணிக்கைகள் அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் பிரதிநிதி, அறங்காவலர்கள், ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள், வங்கிப் பணியாளர்களால் எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக ரூ.ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 165, தங்கம் 455 கிராம், வெள்ளி 649 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 398 கிடைத்தன.