நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 165வது பிறந்த நாள் விழா காந்தி மியூசியத்தில் நடந்தது. பாத்திமா கல்லுாரி மாணவி ஷாலினி வரவேற்றார். மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். தாகூரின் வாழ்க்கை வரலாறு குறித்து கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் பேசினர்.
குழு விளையாட்டுகள் அடிப்படையிலான மொழிப் பயிற்சி நடந்தது. அன்னை சத்யா இல்ல மாணவிகள் சர்வசமய பாடல்களை பாடினர்.