ADDED : செப் 09, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
திருநகர்: தனக்கன்குளம் யோகா நகர் சுவாமி சிவானந்தா யோகா ஆய்வு மையத்தில் சுவாமி சிவானந்தரின் 139வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
அவரது சிலை முன்பு உலக அமைதிக்காக ருத்ர யாகம், சிறப்பு பூஜை நடந்தது. யோகாசன ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். மதிய உணவு வழங்கப்பட்டது. ஆய்வு மைய நிறுவனர் யோகி ராமலிங்கம் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
