ADDED : செப் 09, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
மேலுார்: அழகர்கோவில் மின்வாரிய அலுவலகத்தை தென் மாவட்ட விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
வடக்கு மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் மகேந்திரன், துணைத் தலைவர் தென்னவன், செயலாளர் அர்ஜூனன் முன்னிலை வகித்தனர். நாயக்கன்பட்டி விவசாயி சின்ன அழகனுக்கு மின்இணைப்பு வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர். தாசில்தார் முன்னிலையில் சமாதான கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என மேலவளவு எஸ்.ஐ., முத்துக்குமரன் சமரசம் செய்தார்.
