ADDED : செப் 09, 2026 05:21 PM
திருப்பரங்குன்றம்: ஆஸ்டின்பட்டி ரூட்செட் பயிற்சி நிலையத்தில் கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பு அலாரம் பொருத்துதல், பழுது நீக்குதல் இலவச பயிற்சி முகாம் செப்.,16ல் துவங்கி 13 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி நடக்கும். உணவு, தங்குமிடம் இலவசம். 18 முதல் 50 வரை வயதுள்ளவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் 96262 46671ல் முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது https://forms.gle/qBDtCFyrVzrjwpEW6 ஐ ‘கிளிக்’ செய்து பூர்த்தி செய்து செப். 15க்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரடியாகவும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சிக்கு வருபவர்கள் ஆதார், ஸ்மார்ட் கார்டு, கல்வி, ஜாதி சான்றிதழ், நுாறு நாள் வேலை திட்டத்தில் இருந்தால் அந்த அட்டை நகல், வங்கி பாஸ் புக் முதல் பக்க நகல், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.
