/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வடக்கம்பட்டியில் பிரியாணி திருவிழா
/
வடக்கம்பட்டியில் பிரியாணி திருவிழா
ADDED : பிப் 16, 2025 05:37 AM
திருமங்கலம் : கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டியில் முனியாண்டி சுவாமி கோயில் உள்ளது. 'முனியாண்டி விலாஸ்' என்ற பெயரில் ஓட்டல் வைத்திருப்பவர்கள் இக்கோயிலில் தை, மாசி மாதங்களில் பொங்கல் விழா கொண்டாடுவர்.
தை மாதம் ஒரு பிரிவினரும், மாசி மாதம் மற்றொரு பிரிவினரும் சாமி கும்பிட்டு பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம் வழங்குவது வழக்கம். நேற்று மற்றொரு குழுவினர் கொண்டாடிய திருவிழாவில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர். முனியாண்டி சாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் தேங்காய் பழம், பூமாலையுடன் கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து சாமிக்கு படைத்தனர்.
மேலும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள், கோழிகள் ஆகியவற்றுடன் நிலை மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு படைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் 300 சேவல்கள் பலியிடப்பட்டு அசைவ பிரியாணி தயாரிக்கப்பட்டது. நேற்று காலை பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது.

