ADDED : ஜூன் 24, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: அகில இந்திய பார்வர்டு பிளாக் 86வது ஆண்டு துவக்க விழா கூட்டம் மாநில தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது.
மாவட்ட பொது செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். 2026 தேர்தலை முன்னிட்டு உசிலம்பட்டி அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் முகவர் நியமனம் செய்வது, கூட்டணி கட்சியில் அதிக எண்ணிக்கையில் சீட் கேட்பது குறித்து ஆலோசனை நடத்தினர். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.