ADDED : ஆக 14, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலத்தில் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் இந்தியா - அமெரிக்கா வர்த்தக பரிமாற்றத்தில் குளறுபடி ஏற்பட்டதாக கூறி பிரதமர் மோடியின் படத்தை எரிக்க முயன்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பும் கொடிக்கம்பங்களால் தாக்கி கொண்டனர். போலீசார் தடுத்தனர். கம்யூ., கட்சியினர் 26 பேர் மதுரை - விருதுநகர் ரோட்டில் 10 நிமிடம் மறியலில் ஈடுபட போலீசார் கைது செய்தனர்.