நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பா.ஜ., சார்பில் தேனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி சட்டசபை தொகுதி நிர்வாகிகளுக்கு தேர்தல் முன் தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் சசிகுமார் தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் வீரபிரபாகரன், செயலாளர் உதயசந்திரன் முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர் ராஜபாண்டியன் ஆலோசனை வழங்கினார். துணைத் தலைவர் ரஞ்சித்குமார், பொதுச் செயலாளர் இன்பராணி, ஒழுங்கு நடவடிக்கை குழு வனராஜா, வர்த்தகப் பிரிவு தலைவர் பாபுராஜா, ஒன்றிய தலைவர்கள் பெருமாள், கருப்பையா, சின்னச்சாமி, செல்வம், பாண்டிக்குமார், நாகராஜன், நிர்வாகிகள் மாத்துரான், சாந்தகுமார், தீபன், பிரசாத்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொருளாளர் ஞானப்பழம் நன்றி கூறினார்.

