ADDED : அக் 03, 2025 01:46 AM

மதுரை: மதுரை பா.ஜ., சார்பில் காந்திமியூசியத்தில் உள்ள காந்தி சிலைக்கு பா.ஜ., மேலிடபார்வையாளர் அரவிந்த்மேனன் தலைமையில் மாலை அணிவித்தனர். இதில் மாவட்ட தலைவர் மாரி சக்ரவர்த்தி, மாநில துணைத்தலைவர் கோபால்சாமி, மாநில செயலாளர்கள் வினோஜ் ப.செல்வம், கதலிநரசிங்க பெருமாள், கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளர் மகாசுசீந்திரன், ஊடக பிரிவு ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலயமேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் சிவ.பிரபாகரன் தலைமையில், விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமலிங்கம், கலை, கலாசார பிரிவு மாவட்ட தலைவர் கண்ணன், மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் காவித்துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காவித்துண்டு அணிவித்தது ஏன் காவித்துண்டு அணிவித்தது குறித்து மாநில செயலாளர் சிவபிரபாகர் கூறியதாவது:
காந்தி சிலைக்கு மாலை அணிவித்தபோது சிலை கரும்பச்சை நிறத்தில் இருந்தது. கறுப்பாக இருந்த சிலைக்கு ஏன் பச்சை நிறம் வந்தது. திருப்பரங்குன்றத்தில் சமணர் படுகைக்கும் சிலர் பச்சை நிறம் அடித்து இருந்தனர். இதனால் நாங்கள் காந்தி சிலைக்கு காவிநிற கதர் அணிவித்தோம். அதனை மற்றவர்கள் காவியாக பார்க்கின்றனர். காந்தி, வள்ளுவர் ஆகியோர் ஆன்மிகவாதிகள். அவர்களுக்கு காவி அணிவித்தால் என்ன தவறு என்றார்.