ADDED : மார் 02, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : கப்பலுாரில் பா.ஜ., தேர்தல் அலுவலகத்தை மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார்.
மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். பார்வையாளர் ராஜரத்தினம், தொகுதி பொறுப்பாளர் சக்திவேல், விருதுநகர் தொகுதி அமைப்பாளர் வெற்றிவேல், இணை அமைப்பாளர் கஜேந்திரன், மேற்கு மாவட்ட துணைத் தலைவர் சரவணன், பொதுச்செயலாளர் சிவலிங்கம், செயலாளர்கள் தமிழ்மணி, சின்னச்சாமி, ஆன்மிக பிரிவு மாவட்ட துணைத் தலைவர் லெனின் அண்ணாமலை, ராணுவ பிரிவு தலைவர் ஆண்டி, துணைத் தலைவர் பழனிச்சாமி பங்கேற்றனர்.

