ADDED : மார் 09, 2024 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் தேனி லோக்சபா சோழவந்தான் தொகுதி பா.ஜ., தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.
தொகுதி அமைப்பாளர் கோவிந்தமூர்த்தி தலைமை வகித்தார்.
இணை அமைப்பாளர் ராமதாஸ், பிரசார பிரிவு மாநில செயலாளர் ராஜா, முன்னிலை வகித்தனர். லோக்சபா அமைப்பாளர் ராஜபாண்டி நிர்வாகிகளை அறிமுகம் செய்தார். மாவட்ட செயலாளர்கள் ரவிசங்கர், ஜெயபாண்டி, ஓ.பி.சி., அணித் தலைவர் வாசுதேவன், ஒன்றிய தலைவர்கள் சேதுராமன், முத்துப்பாண்டி, கதிர்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

