/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கணபதி ேஹாமத்துடன் பா.ஜ., தேர்தல் பணி துவக்கம்
/
கணபதி ேஹாமத்துடன் பா.ஜ., தேர்தல் பணி துவக்கம்
ADDED : மார் 15, 2024 07:23 AM
மதுரை : மதுரையில் பா.ஜ., இன்று (மார்ச் 15) கணபதி ேஹாமத்துடன் தேர்தல் பணிகளை துவங்க உள்ளது.
மதுரை மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையொட்டி பூத்கமிட்டி அமைப்பதிலும், ஆலோசனை கூட்டங்களை நடத்துவதிலும் இதுவரை பா.ஜ.,வினர் தீவிரம் காட்டினர். அடுத்து பிரசாரத்தை துவக்க உள்ள நிலையில், மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று பிரசாரம் செய்யும் படி தலைமை உத்தரவிட்டுள்ளது. இவ்வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல லட்சம் பேர் இருப்பர். அவர்களின் முகவரி, போன் எண் உட்பட விவரங்கள் தற்போது மத்திய தலைமையால் மாவட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை நகர் தலைவர் மகா சுசீந்திரன் கூறியதாவது:
மதுரையை பொறுத்தவரை எதிரணி தி.மு.க., என்றே கருதுகிறோம். அதை எதிர்த்து பிரசாரம் செய்ய தயாராகி விட்டோம். இதற்காக மதுரை தொகுதி அலுவலகத்தில் இன்று அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், பின்பு பூத்வாரியாக பிரசாரம் செய்ய உள்ளோம். முத்ரா கடன் பெற்றோர், உஜ்வாலா திட்டம், துாய்மை பாரத், ஆயுஷ்மன்பாரத் திட்ட பயனாளிகளை சந்தித்து பேச உள்ளோம். இப்போது அவர்களுக்கு பிரதமரின் குறுந்தகவலும் அனுப்பப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவில் கடந்தாண்டு 2.40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனாளிகளாக இருந்தனர். இவர்களுடன் அந்தியோதயா திட்டம், 20 கிலோ கருப்பு கவுனி அரிசி பெறும் பயனாளிகள் என பல ஆயிரம் பேர் உள்ளனர். இதனால் இந்தாண்டு மேலும் பல ஆயிரம் பேர் அதிகரித்து இருப்பர். இவர்களையும் சந்திக்க உள்ளோம் என்றார்.

