/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழனிசாமி யாரை பிரதமராக கைகாட்டுவார் பா.ஜ., பொதுச் செயலாளர் சீனிவாசன் கேள்வி

ADDED : மார் 02, 2024 05:41 AM
திருமங்கலம் : ''அ.தி.மு.க., பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, 'இந்த லேடியா, அந்த மோடியா' என கோஷம் எழுப்பினார். இன்றைய பொதுச் செயலாளர் பழனிசாமி யாரை பிரதமராக கைகாட்டுவார்,'' என பா.ஜ., பொதுச் செயலாளர் சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலுாரில் பா.ஜ.,வின் சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. அலுவலகத்தை திறந்து வைத்த மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் பேசியதாவது:
தமிழகத்தில் பத்து நாட்களுக்கும் மேலாக போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பரபரப்பாக உள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க.,வினர் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை எனக் கூறி வருகின்றனர். ஜெயலலிதா இருந்தபோது கூட இந்த லேடியா அந்த மோடியா என்ற கோஷத்தை முன் வைத்தார். ஆனால் தற்போது பழனிச்சாமி யாரை பிரதமராக ஏற்றுக்கொள்வார். யாரை பிரதமராக கை காட்டுவார். அவர் வெற்றி பெற்றால் காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியில் உள்ளவர்களை பிரதமராக கை காட்ட முடியுமா.
மோடியை யார் பிரதமராக ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களோடு பா.ஜ., கூட்டணி அமைக்கும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வி.சி.க., தலைவர் திருமாவளவன் உட்பட மோடியை பிரதமராக யார் ஏற்றுக் கொண்டாலும் அவர்களோடு கூட்டணி வைக்கத் தயார் என்றார்.