/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சட்டசபை தொகுதிக்கு பா.ஜ., பொறுப்பாளர்கள்
/
சட்டசபை தொகுதிக்கு பா.ஜ., பொறுப்பாளர்கள்
ADDED : அக் 23, 2025 04:29 AM
மதுரை: மதுரை மாவட்ட தொகுதிகளுக்கான பா.ஜ., பொறுப்பாளர்கள் தலைமையிலான மூவர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை தெற்கு தொகுதிக்கு மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் பொறுப்பாளர், அவருக்கு கீழ் முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் துரை பாலமுருகன் முறையே அமைப்பாளர், இணை அமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை வடக்கில் கே.கே.சீனிவாசன் பொறுப்பாளர், அமைப்பாளர், இணைஅமைப்பாளர் முறையே நகர் தலைவர் மாரிசக்கரவர்த்தி, முன்னாள் துணைத் தலைவர் கண்ணன்.
மதுரை மேற்கு- வேல்முருகன், பாலகிருஷ்ணன், வினோத், மத்திய தொகுதி கதலிநரசிங்க பெருமாள், சசிராமன், கார்த்திக் பிரபு, மதுரை கிழக்கு- ரவிபாலா, மகாசுசீந்திரன், கே.ராஜா, மேலுார்- சிவபாலன், ராஜசிம்மன், மஞ்சுளா, சோழவந்தான்- தங்கவேல்சாமி, பழனிவேல்சாமி, பொன்குமார், திருப்பரங்குன்றம் - சிவலிங்கம், ராக்கப்பன், இளையராஜா, திருமங்கலம் - ராஜரத்தினம், சரவணகுமார், ஓம்ஸ்ரீகுமரன், உசிலம்பட்டி - சசிகுமார், இன்பராணி, ரஞ்சித்குமார் அறிவிக்கப்பட்டுள்ளனர்.