/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பா.ஜ.,வுக்கு ராஷ்டீரிய லோக் ஜனசக்தி கட்சி ஆதரவு
/
பா.ஜ.,வுக்கு ராஷ்டீரிய லோக் ஜனசக்தி கட்சி ஆதரவு
ADDED : பிப் 28, 2024 04:45 AM
மதுரை : லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ராம்விலாஸ் பஸ்வானின் ராஷ்டீரிய லோக் ஜனசக்தி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
மதுரையில் இக்கட்சி கூட்டம் மாநில தலைவர் நாகேஸ்வரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர்கள் பொன்னுச்சாமி, கார்த்திக்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ரத்னவேல்பாண்டியன் உள்ளிட்ட தென்மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கட்சியின் தேசிய தலைவராக மத்திய அமைச்சர் பசுபதி குமார் பாரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி 3வது முறையாக ஆட்சி அமைக்க ஆதரவு தருவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மணிமாறன், மாநில தலைவர் நாகேஸ்வரன் ஆகியோர் தமிழகத்தில் போட்டியிட 2 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

