ADDED : டிச 28, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை :  மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.,வின் மையக்குழுக் கூட்டம் நடந்தது. இம்மாவட்டத்தில் உள்ள 20 மண்டல்களுக்கு புதிய தலைவர்களை தேர்வு செய்வதற்கான கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார்.
விருதுநகர் லோக்சபா தொகுதி பொறுப்பாளர் வெற்றிவேல், தேர்தல் பார்வையாளர் திருமலைச்சாமி, கோட்டப் பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள், கோட்ட அமைப்புச் செயலாளர் ராமசேகர், தேர்தல் அதிகாரி மாரிமுத்து ரத்தினம், துணை தேர்தல் அலுவலர் தமிழ்மணி, மாவட்ட தேர்தல் பார்வையாளர் ராஜபாண்டி உட்பட பலர் பங்கேற்று கலந்துரையாடினர்.
இம்மாவட்டத்தில் உள்ள 20 க்கு 17 மண்டல்களில் தலைவரை தேர்வு செய்து ஒப்புதலுக்காக தலைமைக்கு பட்டியல் அனுப்பப்பட்டது.

