த.வெ.க., எம்.எல்.ஏ.,வை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
த.வெ.க., எம்.எல்.ஏ.,வை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
UPDATED : நவ 28, 2026 01:01 AM
ADDED : நவ 28, 2026 01:01 AM

ஒத்தக்கடை:
மதுரை ஒத்தக்கடையில் பா. ஜ., மகளிரணி சார்பில், கள்ளக்குறிச்சி த.வெ.க., எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது.
அணி தலைவி சுகப்பிரியா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஹேமா மாலினி பீட்டர் முன்னிலை வைத்தார்.
மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறியதாவது: உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் கண் மூடி கண் திறப்பதற்குள் அண்ணன் விஜய் அங்கே இருப்பேன் என்று சொன்ன முதல்வர், ஒரு பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு தொந்தரவு கொடுத்த கட்சி எம்.எல்.ஏ.,வை உடனடியாக தண்டிக்க திராணி இல்லையென்றால் தமிழகத்தில் உள்ள 4 கோடி சகோதரிகளை எவ்வாறு காப்பாற்றப் போகிறார். முதல்வருக்கு பெண்கள் மீது அக்கறை உள்ளது என்றால் கைதான எம்.எல்.ஏ.,வை உடனே ராஜினாமா செய்ய வைக்க வேண்டும்.
தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துள்ளது. நீதி அரசர் பொதுவெளியில் இந்த பிரச்னையைப் பற்றி பேசியதால் இந்த நடவடிக்கையை இந்த அரசு எடுத்துள்ளது என்றார்.
