ADDED : ஆக 14, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஹார்விபட்டியைச் சேர்ந்த சுப்பையா 82, ஓய்வு பெற்ற மில்தொழிலாளி. தனது வாழ்நாள் சேமிப்புத் தொகை மற்றும் நகை ரூ.60 லட்சத்தை இந்திய ராணுவத்தினருக்கு வழங்கும் வகையில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் வழங்கினார். அவரை பா.ஜ., மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து மாலை அணிவித்து பாராட்டினர்.
இதில் செயலாளர்கள் இளையராஜா, தீபன்முத்தையா, மகளிர் அணி துணைத் தலைவர் லதா, நிர்வாகிகள் பிரசாத்கண்ண்ன் உட்பட பலர் பங்கேற்றனர்.
