/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேரையூரில் கருப்பட்டி காய்ச்சும் பணி தீவிரம்
/
பேரையூரில் கருப்பட்டி காய்ச்சும் பணி தீவிரம்
ADDED : மார் 24, 2025 05:25 AM
பேரையூர்: பதநீர் சீசன் துவங்கியுள்ளதால் பேரையூர் பகுதியில் கருப்பட்டி தயாரிக்கும் தொழில் தீவிரமடைந்துள்ளது.
பேரையூர், தும்மநாயக்கன்பட்டி, சந்தையூர், மேலப்பட்டி, வண்டாரி பகுதிகளில் தற்போது பனை மரத்தில் இருந்து பதநீர் எடுத்து கருப்பட்டி காய்ச்சும் தொழிலை பனைத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் செய்து வருகின்றனர். இவர்கள் பனை மரங்கள் நிறைந்த பகுதிகளில் பனை ஓலையால் குடிசை அமைத்து தங்குகின்றனர்.
அங்கு பதநீரை மூலப்பொருளாகக் கொண்டு கருப்பட்டி காய்ச்சும் தொழில் தற்போது மும்முரமாக நடக்கிறது. பனை விவசாயிகள் கூறுகையில், ''காலை, மாலை நேரங்களில் சேகரிக்கும் பதநீரைக் கொண்டு கருப்பட்டி காய்ச்சப்படுகிறது. ஒரு குடம் பதநீரில் 3 கிலோ கருப்பட்டி கிடைக்கும்.
கிலோ கருப்பட்டி ரூ.280 வரை விற்கிறது. இங்கு தயாரிக்கும் கருப்பட்டி, உள்ளூர் தேவைக்குப் போக மதுரை, சென்னை, கோவை நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது என்றனர்.