/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முற்றுகை போராட்டம் 125 ஆசிரியர்கள் கைது
/
முற்றுகை போராட்டம் 125 ஆசிரியர்கள் கைது
ADDED : பிப் 29, 2024 05:53 AM

மதுரை : மதுரையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) சார்பில் 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்ககோரி சி.இ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட 125 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 'சம வேலைக்கு சம ஊதியம்' வாக்குறுதியை நிறைவேற்ற கோரி மாநில அளவில் 10 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நேற்று அனைத்து மாவட்டங்களிலும் முற்றுகை போராட்டம் நடந்தது.
மதுரையில் மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார். கொட்டாம்பட்டி ஒன்றிய தலைவர் தாமஸ் விட்லம், கள்ளிக்குடி ஒன்றிய தலைவர் மீனாட்சி, மேலுார் ஒன்றிய செயலாளர் சாந்தி, மாநகராட்சி மகளிரணி நிர்வாகி மீனாட்சி உட்பட 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 125 பேர் கைது செய்யப்பட்டனர்.
நிர்வாகிகள் கூறுகையில், வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். அடுத்த கட்டமாக தொடர் உண்ணாவிரதம் இன்று (பிப்.,29) முதல் நடக்கவுள்ளது என்றனர்.

