/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரத்ததான விழிப்புணர்வு மதுரைக்காரர்களுக்கு விருது
/
ரத்ததான விழிப்புணர்வு மதுரைக்காரர்களுக்கு விருது
ADDED : அக் 14, 2025 04:14 AM
மதுரை: தேசிய தன்னார்வ ரத்ததானகொடைநாளை முன்னிட்டு தேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
அமைச்சர் சுப்பிரமணியன் தன்னார்வ ரத்ததான முகாம் அமைப்பாளர்கள், 50 முறைக்கு மேல் ரத்ததானம் செய்தவர்கள், இணையதளத்தில் பதிவுசெய்த தன்னார்வ ரத்ததான கொடையாளர்களுக்கு விருது வழங்கினார்.மதுரையை சேர்ந்த ஈ.வெ.ரா.பெரியார் குருதிக் கொடைக் கழகத் தலைவர் வரதராஜன், ரத்ததான கொடையாளர் சோசு ஆகியோருக்குசான்றிதழ், விருது வழங்கப்பட்டன. மதுரை அரசு மருத்துவமனை ரத்ததானமையம் அதிகளவில் தன்னார்வ ரத்ததான கொடையாளர்களை உருவாக்கியதை பாராட்டி, துறைத் தலைவர் டாக்டர் சிந்தாவிற்கு விருது வழங்கப்பட்டது.