/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இல்லாத ரோடும், பொல்லாத ஆக்கிரமிப்பும் கலங்கும் கற்பக நகர் மக்கள்
/
இல்லாத ரோடும், பொல்லாத ஆக்கிரமிப்பும் கலங்கும் கற்பக நகர் மக்கள்
இல்லாத ரோடும், பொல்லாத ஆக்கிரமிப்பும் கலங்கும் கற்பக நகர் மக்கள்
இல்லாத ரோடும், பொல்லாத ஆக்கிரமிப்பும் கலங்கும் கற்பக நகர் மக்கள்
ADDED : அக் 14, 2025 04:15 AM

மதுரை: 'பழுதடைந்த ரோடு, ஆக்கிரமிப்பு இடிபாடுகளுக்கு மத்தியில் வேதனையுடன் வசிக்கிறோம்' என மதுரை 10 வது வார்டு கற்பக நகர் பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
கற்பக நகர் 9 வது தெரு ஜெயராஜ் கூறியதாவது: குண்டும், குழியும் நிறைந்துள்ளதால் பாதி ரோடுதான் உள்ளது. மீதி பகுதி ரோடாகவே இல்லை. மழை நேரத்தில் தண்ணீர் தேங்கி சுகாதாரக் கேடாகிறது. 12 வது தெருவில் இருந்து 16வது தெரு வரை வாரம் 2 நாட்கள் மட்டுமே குப்பையை அள்ளுகின்றனர். மீதிநாட்களில் குப்பை வீட்டில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
பிற பகுதியில் இருந்து இறைச்சி, உணவு, காய்கறி கழிவுகளை இங்கு கொண்டு வந்து கொட்டுவதால் அவை அழுகி இப்பகுதியினரை பாதிக்கிறது. மின் விளக்குகள் அடிக்கடி பழுதாகி, போதுமான வெளிச்சம் இல்லாமல் உள்ளது. 4 வது குறுக்குத்தெரு, 8 வது தெரு மெயின்ரோடு, 6 வது தெரு பகுதிகளில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. அடிக்கடி பொருட்கள் திருடுபோவதால் போலீசார் கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும்.
குடிமகன்கள் தொல்லை ஜெயப்பிரகாஷ் கூறியதாவது: இப்பகுதியில் போதை ஆசாமிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிறது. பகல்நேரத்தில் குடித்து விட்டுத் திரிவதால் பெண்கள் தனியாக செல்ல பயப்படுகின்றனர்.வடிகால் வாய்க்கால் குப்பையால் நிரம்பியுள்ளதால், கழிவு நீர் ரோட்டில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
இப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. உரிமையாளர்களின் பராமரிப்பின்றி திரியும் அம்மாடுகளால் வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர். தனியாக செல்வோரை கூட்டமாக வரும் தெரு நாய்கள் துரத்துகின்றன. ஆக்கிரமிப்பை மாநகராட்சியினர் முழுமையாக அகற்றாததால், இடிபாடுகளால் துாசி கிளம்பி பாதிக்கிறோம்.எங்கள் பகுதிக்கு பூங்கா, நுாலகம் அவசியம் தேவை.
கவுன்சிலர் கூறுவதென்ன தி.மு.க., கவுன்சிலர் முத்துக்குமாரி கூறியதாவது: கற்பக நகரில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.1 கோடியில் மின்மயானம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து 120 அடி ரோடு வரை பாதாள சாக்கடை இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் 7 மற்றும் 9 வது தெருக்களில் பாதாள சாக்கடை அமைத்துள்ளோம். கற்பக நகர் 6, 7, 9, 10 மற்றும் முதல் குறுக்குத் தெருக்களில் தார் ரோடு அமைத்துள்ளோம். சம்பக்குளம் மெயின் ரோட்டில் ரூ.10 லட்சத்தில் ரேஷன் கடை, சூர்யா நகரில் நிழற்குடை அமைத்துள்ளோம். மக்களின் பாதுகாப்புக்கு போலீசாருடன் இணைந்து செயல்படுகிறோம். எஞ்சிய பகுதிகளில் தார் ரோடு அமைக்கும்படி மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்க உள்ளேன் என்றார்.