நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரைக் கல்லுாரி, மதுரை சமூக சேவா சங்கம் இணைந்து கல்லுாரி வளாகத்தில் நேற்று ரத்த தான முகாம் நடத்தின. கல்லுாரியின் வாரியச் செயலாளர் நடனகோபால், உறுப்பினர் அமுதன், பொருளாளர் அனந்த ஸ்ரீனிவாசன், முதல்வர் சுரேஷ், சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், சங்கத் தலைவர் கஸ்துாரி ரங்கன், சமூக ஆர்வலர் வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
கல்லுாரி ஊழியர் தவமணி, அரசு மருத்துவமனை சார்பில் ராமசுப்பிரமணியன் ஏற்பாடுகளை செய்தனர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்.

