நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திருநகர் ஜெயன்ட்ஸ் குரூப் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. செயலாளர் ஸ்ரீதர், தலைவர் விஜயராகவன் துவக்கி வைத்தனர். பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தார். முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ராஜகோபால், ரத்ததானம் வழங்கிய மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
ஜெயன்ட்ஸ் நிர்வாகிகள் லட்சுமணன், கனகசபாபதி, மரகதசுந்தரம், பிரசன்னவெங்கடேஷ், பத்மநாபன் கலந்து கொண்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்தம் தானமாக வழங்கினர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் சிலம்பரசன், திருஞானசம்பந்தம், வெங்கடேசன், நரசிம்மபாண்டியன் முகாம் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.