ADDED : செப் 23, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை லேடி டோக் கல்லுாரியில் ரத்ததானம் முகாம் நடந்தது.
நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், ரெட்ரிப்பன் கிளப், ஆகிய பிரிவுகள் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து முகாமை ஏற்பாடு செய்திருந்தன. கல்லுாரி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ துவக்கி வைத்தார். டாக்டர் ராஜாவசந்தம், சாலை பாதுகாப்பு உறுப்பினர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். 46 பேர் ரத்ததானம் செய்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி, கலைவாணி உட்பட பலர் ஏற்பாடு செய்திருந்தனர்.
