ADDED : டிச 07, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் முனியாண்டி கோயில் அறங்காவலர் குழு பதவி ஏற்பு விழா நடந்தது.
தலைவராக அமுல் ராணி, உறுப்பினர்கள் பெரியசாமி, சந்திரன், கணேசன், மாரிசாமி பதவி ஏற்றனர். மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, உதவி ஆணையர் வளர்மதி பதவி பிரமாணம் செய்து வைத்தனர். எம்.எல்.ஏ., வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், தனசேகர், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி, பால்பாண்டியன், நகர செயலாளர் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், துணை தலைவர் சுவாமிநாதன் ஒன்றிய அவைத் தலைவர் நடராஜன் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.