ADDED : ஜன 19, 2025 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார் 33. மத்தியபிரதேசம் போபாலில் தோசைக்கடை நடத்தி வந்தார்.
பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வந்தவர், இருநாட்களுக்கு முன்பு போபால் செல்வதாக கூறி புறப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் அப்பகுதி கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.
தவறி விழுந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

