/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எலும்பின் அடர்த்தியை கண்டறியலாம்
/
எலும்பின் அடர்த்தியை கண்டறியலாம்
ADDED : ஜன 13, 2026 01:17 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை அகச்சுரப்பியல் துறையில் டெக்ஸா ஸ்கேன் கருவி மூலம் குறைந்த கட்டணத்தில் எலும்பின் அடர்த்தியை கண்டறியலாம்.
துறைத்தலைவர் டாக்டர் ஸ்ரீதர் கூறியதாவது: எலும்பின் உறுதித்தன்மையை கண்டறிந்து எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்னதாகவே கண்டறியலாம். மெனோ பாஸ் கடந்த, 60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், இளம்வயதில் கர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்கள், மாதக்கணக்கில் 'ஸ்டீராய்டு' மருந்து எடுத்துக் கொள்பவர்கள், 70 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு இப்பரிசோதனை நல்லது.
'மாஸ்டர் ஹெல்த் செக்கப்' மூலம் ரூ.500 கட்டணத்தில் எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்யப்படுகிறது. ஞாயிறு தவிர வார்டு எண் 211 ல் தினமும் காலை 9:00 முதல் 2:00 மணி வரை முன்பதிவு செய்யலாம். உடல் பருமனை துல்லியமாக அளவிட கொழுப்பு சதவீதத்தை அறிவதற்கும் இக்கருவி உதவும் என்றார். முன்பதிவு: 90959 90999.

