நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் வழக்கறிஞர்கள் சங்கம் கிளை நுாலகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்திய தேசிய புத்தகக் கண்காட்சி நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.
சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி தினேஷ் குமார் தொடங்கி வைத்தார். கூடுதல் மாவட்ட உரிமைகள் நீதிபதி மணிகண்டன் பெற்றார்.
வழக்கறிஞர் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் அறிவொளி தலைமை வகித்தனர். நுாலகர் பத்மா வரவேற்றார். முன்னாள் மாவட்ட நுாலக அலுவலர் இளங்கோ, நுாலகர் மலர்விழி, வாசகர் வட்ட தலைவர் சங்கரன், திருமங்கலம் துணைத் தலைவர் பிரசன்னா, வக்கீல்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.