நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை திருநகரில் ------நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் இந்திரா காந்தி மெட்ரிக் பள்ளியில் புத்தக கண்காட்சி நடந்தது. தாளாளர் அரவிந்தன் தலைமை வகித்தார். புக் ஹவுஸ் முதுநிலை விற்பனை சீரமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பள்ளி செயலாளர் கோபிச்சந்திர மோகனா புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்தார். ஜெயண்ட்ஸ் இன்டர்நேஷனல் வெல்பேர் பெடரேஷன் மேனன் தலைவர் கிருஷ்ணசாமி, மதுரை செசையர் ஹோம் டிரஸ்டி வீ. கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர்கள் சுப்ரபாரதி மணியன், அம்சப்ரியா நுால்களை திருநகர் மக்கள் மன்றத் தலைவர் கவிஞர் செல்லா வெளியிட, பள்ளி முதல்வர் ராதிகா பெற்றுக் கொண்டார். பள்ளி அலுவலக கண்காணிப்பாளர் சுதாகரன் நன்றி கூறினார்.