ADDED : ஆக 13, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்.5 முதல் 15 வரை புத்தகத்திருவிழா நடக்கிறது.
மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய பதிப்பாளர்கள் சங்கம் (பபாஸி) சார்பில் நடக்கும் இத்திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற உள்ளன. அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் துவக்கி வைக்கின்றனர். புத்தகங்களுக்கு தள்ளுபடி உண்டு. தினமும் காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும். தினமும் கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கு உண்டு. குழந்தைகளுக்கு பொழுது போக்கு அம்சங்களும், உணவு கூடங்களும் உண்டு. அனுமதி இலவசம்.