ADDED : மார் 26, 2025 03:54 AM
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு மற்றும் நுால் அரங்கேற்றம் நடந்தது. ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். இயக்குநர் அவ்வை அருள் தலைமை வகித்தார்.
'வரலாற்று நோக்கில் தமிழில் கலைச்சொற்கள்' என்ற தலைப்பில் திருச்சி துாய வளனார் கல்லுாரி ஓய்வு பேராசிரியர் நெடுஞ்செழியன் பேசுகையில் 'மொழி வளர்ச்சிக்கு கலைச்சொற்கள் அடிப்படையாகின்றன. காலத்தின் தேவைக்கேற்ப அவை உருவாக்கப்படவேண்டும். தமிழக அரசு தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் 33 துறைகளுக்கான கலைச்சொற்களை உருவாக்கியுள்ளது. சாதரண மக்களும் கலைச்சொல் உருவாக்கத்தில் பங்கெடுத்துள்ளனர்'' என்றார்.
சித்தார்த் பாண்டியனின் பெரிய புராணத்தில் இயற்கை வருணனை, பெருமாளின் ஆன்மிகத் தலத்தில் புரட்சியாளர்கள், எழுத்தாளர் க்ரிஷ்பாலாவின் பலவீனமான இதயம், மதுரை முரளியின் வானொலி நாடகங்கள் எனும் நுால்களை பேராசிரியர்கள் செந்துாரன், பாலமுருகன், மோகனா, ஈஸ்வரன் ஆகியோர் மதிப்பாய்வு செய்தனர். சங்கத் தமிழ்க் காட்சிக்கூட விளக்குநர் புஷ்பநாச்சியார் நன்றி கூறினார்.